
இயல், இயல், நாடகம், நடனம் என கலைத்துறையில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும்
இயல், இயல், நாடகம், நடனம் என கலைத்துறையில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
இதன்படி நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகிபாபு ஆகியோருக்கும், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி மற்றும் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி எஸ் தாணு மற்றும் இயக்குனர்கள் கவுதம் மேனன், ரவி மரியா, லியாகத் அலி கான், மனோஜ் குமார் ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. மேலும் இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீரியல் நடிகர் நந்தகுமார், நடிகை சாந்தி வில்லியம்ஸ், நித்யா உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement