இயக்குனர் ஷங்கர் மகளுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்த அசத்தலான திருமண பரிசு! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இ


tamilnadu chief minister gift to shankar daughter marriage

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மூத்த மகள் மருத்துவர் ஐஸ்வர்யா. இவருக்கு மதுரை பேந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இருவருக்கும் மகாபலிபுரத்தில் உள்ள வெல்கம் ரெசார்ட்டில், பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தத் திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

shankar

திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து கூறி மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக் கூடையை திருமண பரிசாக வழங்கியுள்ளார். மேலும் அந்த கூடையில் 'நாம் மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். பல பணிகளுக்கும் நடுவே தனது மகளின் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து கூறிய தமிழக முதல்வருக்கு மகிழ்ச்சியோடு இயக்குனர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.