சினிமா

யோகி பாபுவிற்கு திடீர் திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!

Summary:

Tamil comedy actor Yogi babu wife photo

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக உள்ளார்.

விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தர்மபிரபு, கூர்க்கா போன்ற படங்களில் நாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் யோகிபாபு.

35 வயதாகும் யோகிபாபு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை தனது குலதெய்வ கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல், எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு மணக்கோலத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 


Advertisement