தமிழகம் சினிமா

வசூலில் தடம் பதிக்கும் அருண் விஜய்யின் தடம்; படக்குழுவினர் உற்சாகம்.!

Summary:

tamil cinima - thadam - arun vijay - good collection

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகியிருந்தாலும் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அருண் விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கியமான படம் என்றே சொல்லலாம். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய்.

அதன்பின்னர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்நிலையில் செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘தடம்’.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். படத்தை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டனர். 

அதன்படி, வெளியான முதல் நாளன்று சென்னையில் மட்டும் ’தடம்’ திரைப்படம் ரூ. 28 லட்சம் வரை வசூல் செய்ய, ‘90 எம்.எல்’ திரைப்படம் ரூ. 30 லட்சம் வரை வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமை வாரயிறுதி நாள் முடிவில், தடம் திரைப்படம் சென்னையில் மட்டும் ரூ. 92 லட்சம் வசூலை குவித்துள்ளது. 

அதன்படி, ’தடம்’ திரைப்படம் வெளிநாடுகளில் வெளியான முதல் நாளன்று ரூ. 50 லட்சம் வசூலித்துள்ளது. இரண்டாம் நாளில் (சனிக்கிழமை) ரூ. 60 லட்சம் வசூலை பதிவு செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவிந்து வரும் வரவேற்பு காரணமாக, ’90 எம்.எல்’ படத்தை விட, ’தடம்’ படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


Advertisement