சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் திடீர் மாரடைப்பால் மரணம்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

Summary:

பிரபல ஆர்ட் டைரடக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார்.

தமிழ் சினிமாவில் பிரபல முக்கிய இயக்குனர்களிடம் பணியாற்றிய கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். சிறந்த கலை இயக்கத்துக்காக மூன்று முறையும் சிறந்த காஷ்ட்யூம் டிசைனுக்காக இரண்டு முறையும் தேசிய விருது பெற்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

 சென்னை மடிப்பாக்கத்தில் தனது மனைவி ராஜலட்சுமியுடன் வசித்து வந்த இவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. 

கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், "என் கலைத்துறையில் என் கண்களில், என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று. வாடிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement