இரண்டாவது ரவுண்டு போகலாமா? நடிகையின் ஆசை...!



tamil-cinema-actress-gosip

இரண்டாவது ரவுண்டு போகலாமா? நடிகையின் ஆசை...! 

தனது கனவு நிறைவேறிவிட்ட ஆசையில், அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கும் முன்னணி நடிகை சம்பள விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளாராம். 

தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகிகளில் ஒருவரான மூன்றெழுத்து நடிகை நடித்த காதல் படம், சமீபத்தில் ரிலீசாகியதாம். அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். இதனால் குஷியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உச்ச நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற நடிகையின் கனவு நிறைவேறிவிட்டது, அடுத்து என்ன பிளான் என்று நிருபர்கள் கேள்வி கேட்க, இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைப்பதாக நடிகை கூறினாராம்.

அந்த ஆசையில், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். மேலும் முன்னணி நாயகர்களுக்கு போன் செய்தும் இதுபற்றி கூறி வருகிறாராம். சம்பள விஷயத்தில் நடிகையின் இந்த அந்தர் பல்டி மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.