உங்களுக்கு போரடிக்குதா..என்னோட விளையாடுங்க! ரசிகர்களுக்கு அழைப்புவிடுத்த நடிகை தமன்னா!tamanna-welcomed-fans-to-join-online-game

தமிழ் சினிமாவில் கேடி  திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்  கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புக்கு தடை செய்யப்பட்டதால் நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களது வீடுகளில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

tamanna

இவ்வாறு வீட்டில் முடங்கி இருக்கும் நடிகை தமன்னா சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எப்படி தான் இந்த லாக்டவுனை சமாளிக்கிறீங்களோ  எனக்கு ரொம்ப போர் அடிக்குது.. வீட்டுலயே சும்மா இருக்க முடியல.. அந்த போரிங்க சமாளிக்க ஆன்லைன் கேம் விளையாடுறேன்.. நீங்களும் என்னோட விளையாட வாங்க, நாம விளையாடலாம்.  முடிந்தால் என்னுடைய ஸ்கோரை முந்துங்கள் பார்க்கலாம்  என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.