லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பீர்களா?? நடிகை தமன்னா கூறிய பதிலை பார்த்தீர்களா!!

லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பீர்களா?? நடிகை தமன்னா கூறிய பதிலை பார்த்தீர்களா!!


tamanna-talk-about-act-with-legend-saravana

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கசக்கமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமன்னாவுக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது கைவசம் தற்போது போலோ சங்கர், எப் 3, குர்துண்டா சீதாகலம் போன்ற பல படங்கள் உள்ளன.

Legend saravana

நடிகை தமன்னா லெஜண்ட் சரவணனுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவரிடம் செய்தியாளர்கள், லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பீர்களா? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நான் தேடி வரும் எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. சமீபகாலமாக செலக்டிவான படங்களிலேயே நடித்து வருகிறேன். அதனால் படத்தின் கதையும், எனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நான் அவருடன் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.