ஏர்போர்ட்டில் ரசிகரை கட்டியணைத்து கண்கலங்கிய தமன்னா.! அச்சோ.. ஏன்னு பார்த்தீங்களா.! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. மில்க் பியூட்டி என ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழி படங்களிலும் செம பிஸியாக நடித்துள்ளார்.
நடிகை தமன்னா தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் வெப் சீரிஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகை தமன்னா ஜீ கர்தா என்ற பாலிவுட் வெப் சீரிசில் மிகவும் ஆபாசமாக, படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின் அவருக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் பச்சை குத்தியிருந்த தமன்னாவின் முகத்தை அவரிடமே காண்பித்துள்ளார். அதனை கண்டு நெகிழ்ந்த தமன்னா உடனே அவரை கட்டியணைத்து கண்கலங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.