சினிமா

தல அஜித்துக்காக எங்களின் ஒரு வருட தவம் வீண் போகவில்லை!. ஒரே படத்தில் பல திறமைகளை காட்டிய தல அஜித்!.

Summary:

tala ajith fans talk about viswasam movie


வரும் பொங்கலை முன்னிட்டு இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கூடினர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்து குடும்பக் கதையை மையப்படுத்திய இப்படம் இன்று வெளியானதை அடுத்து ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு எங்களின் ஒருவருட தவம் வீண் போகவில்லை என கூறிவருகின்றனர்.

   


Advertisement--!>