சினிமா

புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த நடிகை சுவலட்சுமியின் தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

Suvalakshmi latest photo viral

தமிழ் சினிமாவில்1995 ஆம் ஆண்டு அஜித்துடன் இணைந்து ஆசை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் லவ் டுடே, கோகுலத்தில் சீதை, நிலாவே வா,  இனியவளே, தினம் தோறும், நீ வருவாய் என, சுயம்வரம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடைசியாக நடித்த நதிக்கரையினிலே திரைப்படம் தமிழ்நாடு மாநில விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. 

 மேலும் தமிழ் மட்டுமின்றி அவர் வங்காளம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஸ்வாகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

அதனை தொடர்ந்து அவர் தனது கணவருடன் சான் பிரான்சிஸ்கோ என்ற நகரில் வசித்து வருகிறார். மேலும் அவருக்கு சமீபத்தில் கூட  சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிப்பதற்கு படவாய்ப்புகள் வந்த நிலையிலும் அவர் நடிக்க  மறுத்துள்ளார். இந்நிலையில் அவர் தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement