இந்தியா சினிமா

ஏழை ரசிகனின் பெயரில் கேரளாவுக்கு 1 கோடி வெள்ளநிவாரண நிதி வழங்கியவர் இந்த சுஷாந்த்..! உறங்கியது அந்த கொடையுள்ளம்..!

Summary:

Sushanth singh kind heart users spreading after his death

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்  சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுசாந்த் இறந்த தகவலை அடுத்து ரசிகர்கள் பலரும் அவரைப்பற்றிய தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

 அந்த வகையில், கேரளா மாநிலம் கடுமையான வெள்ளத்தில் சிக்கி சீரழிந்தபோது பல்வேறு உதவிகளை கேரளா மக்களுக்கு செய்துள்ளார் சுஷாந்த் சிங். குறிப்பாக தனது ரசிகர்கள் மூலம் சில குழுக்களை உருவாக்கி கேரளாவிற்கு அவர்களை அனுப்பி சுமார் 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கேரளா மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இந்த சுஷாந்த் சிங்.

அதுமட்டும் இல்லாமல், சுஷாந்தை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் அவரது ரசிகர் ஒருவர், நான் கேரளா மக்களுக்கு உதவ நினைக்கிறன் ஆனால் என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்வது? தயவு செய்து சொல்லுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த சுஷாந்த், கவலை படாதீர்கள், உங்கள் பெயரில் ஒரு கோடி ரூபாயை கேரளா மக்களுக்கு நிதியாக வழங்குகிறேன் என கூறி, அந்த ரசிகரின் பெயரில் 1 கோடி பணத்தை கேரளா வெள்ள நிவாரண பணிக்காக அனுப்பினார் சுஷாந்த்.

இத்தகைய கொடையுள்ளம் கொண்ட அந்த நல்ல மனிதர் தனது 34 வயதில் இந்த உலகத்தை விட்டு சென்றது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement