திரைக்கு வரலாமலே சூரரைப் போற்று திரைப்படம் இத்தனை கோடி வசூலா..? சூர்யாவை போற்றும் ரசிகர்கள்.!

திரைக்கு வரலாமலே சூரரைப் போற்று திரைப்படம் இத்தனை கோடி வசூலா..? சூர்யாவை போற்றும் ரசிகர்கள்.!



Suryas soorarai potru movie collection report

நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைத்துறையை செயலிழந்து உள்ளது. இதில் மாஸ்டர், சூரரைப் போற்று போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்துகூட திரையில் வெளியிடமுடியாமல் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில்தான் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. பெரிய நடிகரின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் படம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

surya

இந்நிலையில் இந்த படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தை அதே ௬௦ கோடி விலைக்கு வாங்கியுள்ளதாகவும், மேலும் படத்தின் சேட்டிலைட் மற்றும் மற்ற மொழிகளை சேர்த்து சூரைப்போற்று ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

திரைக்கு வராமலையே சூர்யாவின் படம் ௧௦௦ கோடி வசூலாகி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.