மீண்டும் கெஸ்ட் ரோலில் 'ரோலெக்ஸ்'... மெயின் ஹீரோ யார் தெரியுமா.? வேற லெவல் அப்டேட்.!
மீண்டும் கெஸ்ட் ரோலில் 'ரோலெக்ஸ்'... மெயின் ஹீரோ யார் தெரியுமா.? வேற லெவல் அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னோடி நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் ரஜினி தனது பகுதியை நடித்து முடித்து விட்டார். இனி இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டுமே இருக்கின்ற நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 170 ஆவது படத்தில் 'ஜெய் பீம்' திரைப்படத்தை இயக்கிய ஞானவேலுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் சூப்பர் ஸ்டார். அதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
தற்போது இந்த திரைப்படத்தினைப் பற்றிய புதிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியின் படி ரஜினியின் 170ஆவது திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் தெரியவந்துள்ளது.
மேலும் ரஜினியின் 170 வது திரைப்படத்தை இயக்கிய பிறகு ஞானவேல் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம். சூர்யா ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததும் நாம் அறிந்ததே.