சினிமா

கார்த்தி மற்றும் ஜோதிகா நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா!

Summary:

surya release thampi movie firstlook poster

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவை நடிகர் சூர்யாவின் மனைவியாவார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா மீண்டும்  36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் அவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களை அவரது கணவரே தயாரித்துள்ளார். 

KARTHI WITH JYOTHIKA க்கான பட முடிவு

இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது மைத்துனரும், பிரபல நடிகருமான கார்த்திக்குடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை திரிஷ்யம் மற்றும் பாபநாசம் பட புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வருகிறது. மேலும் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் கார்த்தி மற்றும் ஜோதிகாவின் பாதி முகம் காட்டப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிக்கும் இப்படத்திற்கு தம்பி என பெயரிடப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.


Advertisement