சினிமா

ஒரு தரமான சம்பவம் இருக்கு.! மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி! வெளியான அசத்தலான தகவலால் செம ஹேப்பியில் சூர்யா ரசிகர்கள்!

Summary:

நடிகர் சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் 38வது திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 12-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.  மேலும் இதன் டிரைலர் தற்போது  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் தனது 39 வது படத்தில் நடிக்க உள்ளார். வாடி வாசல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா ஏற்கனவே பாண்டியராஜ் இயக்கத்தில் பசங்க 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் பாண்டியராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இருக்கு ஒரு தரமான சம்பவம் என கூறி வெளியிட்டுள்ளார்.


Advertisement