சினிமா

40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்? பிரபல நடிகை ஓபன் டாக்- சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

suruthi talked about her marriage

நடிகை ஸ்ருதி பிரபல தனியார் தொலைக்காட்சியின் சன் டிவியில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான தென்றல் சீரியலில்  துளசி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு 2015 வெளியான "அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்", "அபூர்வராகங்கள்" போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் "அழகு" சீரியலில்  சுதா கேரக்டரில் நடித்து வருகின்றார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

தொடர்புடைய படம்

ஸ்ருதிக்கு தற்போது 40 வயதாகிறது. 40 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கான பதிலை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஸ்ருதி கூறியதாவது: "எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடைபெறவில்லை" என்று கூறி அதிலிருந்து மனம் வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது நடிகை ஸ்ருதி தனது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.எனவே  விரைவில் அவரது திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement