யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது! நடிகர் சூர்யாவை நினைத்து வருந்தும் ரசிகர்கள்.

Suriya 7 flim flopp


Suriya 7 flim flopp

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர் .சில நாட்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படம் படு தோல்வியை தழுவியது.

அப்படத்தை தொடர்ந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில், உருவான காப்பான் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படம் சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்த நிலையில் அதும் தோல்வியை தழுவியுள்ளது.

Suriya

இவ்வாறு தொடர்ந்து 7 படங்கள் அதாவது அஞ்சான், மாஸ், 24,சிங்கம்3, தானா சேர்ந்த கூட்டம், என். ஜி. கே தற்போது காப்பான் படங்கள் படுதோல்வியானதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் வருத்ததில் இருந்து வருகின்றன.