சினிமா

விஷாலின் துப்பறிவாளன் 2வில் இந்த பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்!

Summary:

விஷால் நடிப்பில் உருவாகும் துப்பறிவாளன்2 திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி நடிக்கவுள்ளார்.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில், விஷாலே நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் துப்பறிவாளன் 2.  இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அதனை தொடர்ந்து மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மிஷ்கின் அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

பின்னர் விஷால் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், மீதி படப்பிடிப்பு நவம்பர் 9ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில்  அஷ்யா, ரகுமான், கவுதமி, பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளனர். மேலும் அவர்களுடன் பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியும் நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே அழகன் உள்ளிட்ட படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். 

 


Advertisement