சினிமா

அட! சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது! ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல! அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Summary:

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி அண்மையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். தாங்களே சொந்தமாக பாடல் எழுதி, அதனை பாடிவரும் இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. 

மேலும் அந்த சீசனில் செந்தில் கணேஷ் வெற்றியாளரானதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இருவரும் ஜோடியாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் அழகிய உடையணிந்து ஹீரோயின்களுக்கு இணையாக அசத்தல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது! என  நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.

View this post on Instagram

Really happy with Jaya sister , u gave me a great opportunity and thanks to JM design I had a Nice experience with Makup Artist Rathiga sis and ufx studio's Contact to:8248985655 Blouse :@jm_fashion_design Model: @rajalakshmi Photo :@kesavankrishnanphotography Studio : @ufxdigitalstudio Mua : @rathisri2 @rathisrimakeover @ufxdigitalstudio Blouse :@jm_fashion_design #kesavankrishnanphotography #indianculture #traditionalsaree #sareelove #indianmodel #singerrajalakshmi #vijaytv #vintagephotography #indianculture #traditionalsaree #sareelove #indianmodel #singerrajalakshmi #vijaytv #celebirty #aariworkblouse #jarthosiwork #embroidery #aariworkjewell #aariworklehanga #weddingblouse #weddinglehanga #kurtisdesign #jmfashiondesign #stonework #aariworksaree #silksaree #silksareeblouse #Senthilganesh official

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on


Advertisement