சினிமா

சதீஷ்க்கு ஜோடியாகும் பாலிவுட் கவர்ச்சி புயல்! அட..என்னவொரு தெய்வீகசிரிப்பு.. கலாய்த்து தள்ளும் பிரபல இளம் நடிகை!!

Summary:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திர

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சதீஷ். இவர் அடுத்ததாக சிந்தனை செய் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் யுவன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஒரு ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளார்.

 இப்படத்தை விஏயு என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இதில் முதன்மை ஹீரோயினாக சன்னி லியோன் நடிக்கிறார். மேலும் அவருடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் சன்னி  லியோனுக்கு ஜோடியாக சதீஷ் நடிக்கிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அவரை கலாய்க்குமாறு நடிகை பிரியா பவானி சங்கர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என பதிவிட்டுள்ளார்.


Advertisement