விஷாலை தூக்கிட்டு, விஜய் சேதுபதியை போட்ட சன் டிவி! விரைவில் ஆரம்பம்!

விஷாலை தூக்கிட்டு, விஜய் சேதுபதியை போட்ட சன் டிவி! விரைவில் ஆரம்பம்!


Sun tv vijay sethupathi program starts soon

தொலைக்காட்சி நிறுவனங்களில் இன்று இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி தொடர்களை அதிகம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தொடங்கி பலரும் டிவி சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் சீரியல்களை தாண்டி புது புது நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது சன் டிவி.

Sun naam oruvar

அந்தவகையில் சன் டிவி இல் சில மாதங்களாகா ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஓன்று சன் நாம் ஒருவர். நடிகர் விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தினரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதே இந்த நிகழ்ச்சி.

தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இது சீசன் ஓன்று என்றும், விரைவில் சீசன் இரண்டு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவொரு ஞாயிறு இரவு 9 . 30 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து, அதே நேரத்தில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

Sun naam oruvar

விஷால் தொகுத்து வழகியை சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியை தூக்கிவிட்டு தற்போது அந்த இடத்தில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது சன் டிவி. வரும் ஞாயிறு இரவு 9 . 30 மணி முதல் விஜய் சேதுபதியின் புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.