சினிமா

அனைத்து சேனல்களையும் ஓரங்கட்டி கெத்து காட்டிய சன் தொலைக்காட்சி.! எகிறிய டிஆர்பி.!

Summary:

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP விவரங்கள் வருவது வழக்கம். அதில் சன், விஜய்

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP விவரங்கள் வருவது வழக்கம். அதில் சன், விஜய் இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் தான் இடம்பெறும். ஆரம்பத்தில் இருந்து அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி என்றே கூறலாம். அதற்க்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் இருந்தே பல பிரபலங்கள் நடிக்கும் சீரியல்கள் தான்.

சமீப காலமாக விஜய்யின் செம்பருத்தி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இவற்றில் எதாவது ஒன்று TRP -யின் டாப் 5ல் இடம்பிடித்துவிடும். இந்தநிலையில் கடந்த வாரத்திற்கான TRP விவரம் வெளிவந்துள்ளது. அதில் தனிகாட்டு ராஜாவாக டாப் 5ல் சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பிய படங்கள் மற்றும் சீரியல்கள் தான் இடம்பெற்றுள்ளன.

இதனை சன் தொலைக்காட்சி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தால் TRP விவரங்களில் அதிக மாற்றங்கள் ஏற்படும். 


Advertisement