பிரபல சன் டிவி நிகழ்ச்சி முடிவடைகிறது. எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிரபல சன் டிவி நிகழ்ச்சி முடிவடைகிறது. எந்த நிகழ்ச்சி தெரியுமா?


sun-tv-sun-naam-oruvar-show-ended

தொலைக்காட்சி நிறுவனங்களில் இன்று இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி தொடர்களை அதிகம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தொடங்கி பலரும் டிவி சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் சீரியல்களை தாண்டி புது புது நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது சன் டிவி.

அந்தவகையில் சன் டிவி இல் சில மாதங்களாகா ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஓன்று சன் நாம் ஒருவர். நடிகர் விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தினரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதே இந்த நிகழ்ச்சி.

Sun naam oruvar

சினிமாவில் பிரபலமாக இருக்கும் யாரவது ஒருவர், ஏதாவது வேலை பார்த்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்வார்கள். மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒவொரு ஞாயிறு இரவும் 9 . 30 க்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இது சீசன் ஒன்றுதான் என்றும், விரைவில் சீசன் இரண்டு தொடங்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.