பிரபல தமிழ் சீரியல் நடிகையின் திடீர் திருமணம்.. காதல் திருமணமா?.. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமா?.. மனம்திறந்த நடிகை..!!

பிரபல தமிழ் சீரியல் நடிகையின் திடீர் திருமணம்.. காதல் திருமணமா?.. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமா?.. மனம்திறந்த நடிகை..!!


Sun TV Serial Actress Sruthi Marriage

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நெடுந்தொடர் நாதஸ்வரம். இத்தொடரை திருமுருகன் எழுதி, இயக்கிய நிலையில், குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ருதி. 

இவர் இதன்பின் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். அதைப்போல ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி இவருக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் பூச்சூடல் விழா நடைபெற்றது. 

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சுருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதியை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

தமிழ் நடிகை

இந்த நிலையில், திடீரென ஸ்ருதிக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இது குறித்து சமீபத்தைய பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதி, "பலரும் எங்களது திருமணம் காதல் திருமணம் என்று நினைத்துள்ளனர். ஆனால் எங்களது திருமணம் இருவீட்டார் சமூகத்துடன் நடைபெற்ற திருமணம்" என்று கூறியுள்ளார்.

மேலும் "கல்யாணத்துக்கு முன் அரவிந்த் சர்ப்ரைஸாக என் கண்ணை அவர் கையில் டாட்டூவாக குத்தி வந்திருந்தார். அதுதான் அவருடைய முதல் டாட்டூ. அதை பார்த்ததும் என்னை அறியாமலேயே கண் கலங்கிவிட்டது. கல்யாணத்துக்கு பின் தினந்தினம் அதிக காதல், பரிசு என வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.