ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய பிரபல சன் டிவி சீரியல் நடிகை! புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய பிரபல சன் டிவி சீரியல் நடிகை! புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!


sun-tv-metti-oli-kaviri-current-photo

நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்  நடிகை காவிரி. 1990 களில் வெள்ளி திரையில் வளம் வந்த இவர் போக்கிரி தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் வெள்ளி திரையை விட்டு விலகிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல  மெட்டி ஒளி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதனை தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் நடித்துள்ளார் காவிரி.

Mettioli

அதன் பிறகு சீரியல்களுக்கும் ஓய்வு கொடுத்த காவிரி ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு  பெங்களுருவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார், எப்படி உள்ளார் என எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மெட்டி ஒளி Re-யூனியன் நிகழ்ச்சிக்கு அவர் வந்தார், அவரை பார்த்த சக நடிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர், காரணம் அவரது எடை குறைந்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Mettioli