சினிமா

அட.. வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மா இந்த பிரபல நடிகையா! இவர் ஏற்கனவே அந்த மாஸ் படத்தில் மாமியாரா நடிச்சுருக்காரே!

Summary:

வலிமை படத்தில் நடிகர் அஜித்துக்கு அம்மாவாக நடிகை சுமித்ரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இதில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துவருவதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பரவிவந்த கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் தடைபட்டது.  பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஷூட்டிங் துவங்கியுள்ளது. 


இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்திற்கு அம்மாவாக பிரபல மூத்த நடிகை சுமித்ரா நடிக்கவுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் நடிகை தமன்னாவிற்கு அம்மாவாக, அஜித்திற்கு மாமியாராக சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement