
என்ன ஒரு சிரிப்பு.. வித்தியாசமாக மகனுக்கு பாடம் கற்பிக்கும் நடிகை சுஜா வருணி..! வைரலாகும் வீடியோ இதோ...
தமிழ் சினிமாவில் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பாதியில் வந்து பலரின் கவனத்தை ஈர்த்தார். பிக்பாஸ் போட்டியில் தனது விடா முயற்சியினால் சக போட்டியாளர்களுடன் தீவிரமாக போராடி பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா. அதன்பின்னர் நடிகர் சிவாஜி அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து சுஜா திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் மற்றும் மகனின் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அந்தவகையில் அவர் தற்போது, மகனுக்கு வித்தியாசமாக வாரத்தின் நாட்கள் சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி...
Advertisement
Advertisement