வாவ்..சூப்பர்..மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சுஜா வருணி.!

வாவ்..சூப்பர்..மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சுஜா வருணி.!


Suja again come back in cinema

தமிழ் சினிமாவில் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் இதுவரை சுமார் 40 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பாதியில் வந்து பலரின் கவனத்திற்கு வந்தார். அவர் இந்த போட்டியின் இறுதி வரை செல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவருடைய போராட்டம் ரசிக்கும் வகையில் இருந்தது.

Suja varun

பின்னர் தனது காதல் கணவரை திருமணம் செய்து கொண்ட சுஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நீண்ட காலம் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த சுஜா தற்போது நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் த்ருஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.