"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அதிரடி சரவெடி.. கதாநாயகனாக களமிறங்கும் பீட்டர் ஹெய்ன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியவர் பீட்டர் ஹெயின்.
அந்நியன், சிவாஜி, கஜினி, ராம் சரணின் மாவீரன், எந்திரன், 7ம் அறிவு, பாகுபலி, புலி முருகன் உட்பட பல படங்களில் இவரின் சண்டை காட்சிகள் உருவாக்கம் ரசிகர்களை திரையுடன் கட்டிப்போட்டது.
இந்நிலையில், ட்ரென்ட்ஸ் சினிமாஸ், எம்டி சினிமாஸ் தயாரிப்பில், மா.வெற்றி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் ஒன்று விரைவில் தனது படப்பிடிப்பு பணிகளை தொடங்கவுள்ளது. இப்படத்தில் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் ஹெயின், கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
படத்திற்கு தற்போது வரை பெயர் வைக்கப்படாத நிலையில், பூஜை மட்டும் படக்குழு சார்பில் போடப்பட்டு, ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. விரைவில் அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.