தமிழகம் சினிமா

சின்மயியை இதுக்கு மேல யாரும் அசிங்கமா திட்ட முடியாது! நீங்களே பாருங்க

Summary:

Stranger abused badly chinmayi

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து #MeToo என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது. தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கினர்.  

இந்நிலையில் பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார். இந்நிலையில் சின்மயி சினிமாவை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளார்.

அன்று முதல் சின்மயி பல்வேறு இண்ணல்களை சந்தித்து வருகிறார். அவரால் பொது இடங்களில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. அவரது நடத்தயை பற்றி பலரும் பலவிதமாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தபோதிலும் தனிப்பட்ட முறையில் அவருக்கு அவமானங்களே மிச்சம். 

சின்மயியுடன் சமூக வலைதளங்களில் உறையாடும் பலர் அவரை மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இந்நிலையில் அவரைப்பற்றி மிகவும் மோசமாக திட்டி ஒருவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை சின்மயி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் சின்மயி, "என்னைப்போல் #MeToo மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய பெண்கள் அடையும் இண்ணல்களைப் பாருங்கள். எனக்கு இதைப்போன்ற மோசமான குறுஞ்செய்திகள் தினமும் குறைந்தது 5 ஆவது வருகிறது. இவைகள் சற்று உதாரணங்களே. ஆனால் இவை அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் பொருமையாக இருந்து வருகிறேன். என்ன ஒரு கலாச்சாரம் இது என்று புரியவில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


Advertisement