சினிமா

நடுரோட்டில், பலபேர் முன்னிலையில் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா!! வைரல் வீடியோ!

Summary:

sreya dance in road


தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஷ்ரேயா.

ரஜினி, விஜய் என்று பிரபல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். தற்போது  படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார் ஸ்ரேயா.

இந்தநிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்த உற்சாகத்தில், நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement