நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
சிகரத்தை தொட்டாலும் தொடக்கத்தை மறக்காத சூர்யா.. நன்றி மடலில் உருக்கமான பதிவுகள்!
68 ஆவது தேசிய விருது பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 தேசிய விருதுகளை ‘சூரரைப்போற்று’ படம் வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுள்ள நடிகர் சூர்யா நன்றி மடல் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த மடலில், தன்னுடன் சேர்ந்து தேசிய விருதினை பெறும் மற்ற கலைஞர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சூரரைப் போற்று படத்தை தவிர மற்ற படங்களுக்காக தேசிய விருதினை பெற்ற கலைஞர்களுக்கும் சூர்யா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தன்னை முதல்முதலாக நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் தயாரிப்பாளர் மணிரத்னம் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துள்ள சூர்யா எப்போதும் உறுதுணையாக இருக்கும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரினை குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y