சூர்பனகையான பிரபல இளம்நடிகை! மிரட்டலான பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார் நம்ம விஜய் சேதுபதி!

சூர்பனகையான பிரபல இளம்நடிகை! மிரட்டலான பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார் நம்ம விஜய் சேதுபதி!



soorpanagai first look poster leaked

தமிழ் சினிமாவில் 2005 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா. அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெருமளவில் பிரபலமானவர்.அதுமட்டுமின்றி அவர் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் என 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி அவர் பாலிவுட்டில் த்தாவி அனில் கபூர், சோனம் கபூர், ஜூஹி சாவ்லா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்த எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா என்ற படத்திலும் நடித்திருந்தார்.இந்நிலையில் ரெஜினா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூர்ப்பனகை என்று எபடத்தில் நடிக்கிறார். இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜு இயக்கும் இப்படம் சரித்திர காலத்து கதையம்சம் கொண்ட திகில் படமாகும்.

regina

பழங்காலத்தில் தவறு செய்பவர்களை கழுவேற்றி தண்டிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் சூர்ப்பனகை படத்தின் First லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் ரெஜினாவின் தோற்றம் மிகவும் மிரட்டலாக இருப்பதாக கூறியுள்ளனர்.