ஊரடங்கில் கொடைக்கானலில் குதூகலம்! புகைப்படத்தால் சிக்கிய விமல், சூரி! தடையை மீறியதால் ஏற்பட்ட பெரும் சிக்கல்!

ஊரடங்கில் கொடைக்கானலில் குதூகலம்! புகைப்படத்தால் சிக்கிய விமல், சூரி! தடையை மீறியதால் ஏற்பட்ட பெரும் சிக்கல்!


soori-vimal-went-kodaikanal-in-corono-lockdown

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விமல் மற்றும் சூரி. அவர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கொடைக்கானலுக்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வர மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் சென்று , அங்கு தடைசெய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதியில் மீன் பிடித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை  கிளம்பியது. 

corono

இந்நிலையில் தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக பேரிஜம் ஏரிக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பணியிடை நீக்கமும்செய்யப்பட்டுள்ளனர். மேலும் விமல், சூரி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது ஒருபுறமிருக்க, அனைவருக்கும் அவசர தேவைகளுக்கு மட்டுமே இபாஸ் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சூரி மற்றும் விமல் மட்டும்  எவ்வாறு கொடைக்கானல் சென்றனர் என பல கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.