இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இந்த நடிகரா ஹுரோவாக நடிக்கிறார்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இந்த நடிகரா ஹுரோவாக நடிக்கிறார்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வெற்றிமாறன்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்று முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். 

அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை, அசுரன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூரியை வைத்து தான் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.மேலும் விரைவில் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் ஆரம்பமாகவுள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo