அடேங்கப்பா! சூரி மகனுக்கு இப்படியொரு திறமையா? யார் கையில் விருது வாங்கியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

அடேங்கப்பா! சூரி மகனுக்கு இப்படியொரு திறமையா? யார் கையில் விருது வாங்கியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!


soori son got best performar award in cricket

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் பிரபலமானார். 

அதனைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால்,சிவகார்த்திகேயன் என ஏராளமான பிரபலங்களின் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலு‌ம் இன்று புகழின் உச்சியில் இவர் ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றுள்ளார்.

Soori

இயல்பிலேயே கலகலப்பாக இருக்கும் இவருக்கு தற்போது ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது.மேலும் சமீபத்தில் இவர் நடித்திருந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவ்வாறு ஏராளமான ரசிகர்கள் பாட்டாளங்களை கொண்டு விளங்கும் சூரியின் மகன் சஞ்சய். இவர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் மதுரை கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய 14 வயதிற்கு குறைவானோர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட அவர்  பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கையால் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை பெற்றுள்ளார். அந்த புகைப்படத்தை சூரி பெருமையுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.