அட.. 45 வயதிலும் சும்மா சிக்கென இருக்கும் காதலர் தினம் ஹீரோயின்! அவரது டீசர்டில் என்ன இருக்கு பார்த்தீர்களா!



sonali-pinthre-latest-photo-viral

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே.அதனைத் தொடர்ந்து அவர் கதிர் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற காதலர் தினம் திரைப்படத்தில் ஹீரோயினாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தில் குணால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் சோனாலி  அர்ஜுனுடன் கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். அதனைத் தொடர்ந்து கேன்சரால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக மீண்டுள்ளார். இதனை தொடர்ந்து சோனாலி ஊக்கப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

  Sonli

இந்த நிலையில் தற்போது 45 வயது நிறைந்த சோனாலி ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சோனாலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில்,அவர் 
என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ.அதை பொருத்து தான் என்னுடைய மூடு இருக்கும்.. என்று வாசகம் பதிந்த டீ சர்ட்டை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.