அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அச்சோ.. சினேகனின் மனைவிக்கு என்னாச்சு! ஹேர் ஸ்டைலை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்!! இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி மாபெரும் பிரபலமாக இருப்பவர் சினேகன். அதனை தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினேகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை நடிகையான கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் அவர்கள் திருமணத்திற்கு பிறகு பல நேர்காணல்களில் கலந்து கொண்டனர். மேலும் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அடிக்கடி தங்களது புகைப்படங்களை பகிர்வார். இந்த நிலையில் அவர் தற்போது டாம் பாய் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்டு ஷாக்கான ரசிகர்கள் கன்னிகாவின் நீளமான முடிக்கு என்னாச்சு? என கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இது உண்மையான முடி இல்லை என தெரிவித்துள்ளார்.

