வாவ்.. அழகில் அம்மாவை உரிச்சு வச்சிருக்காரே! நடிகை சினேகாவின் மகள் எப்படி வளந்துட்டார் பார்த்தீங்களா!!



Snega deepavali celebration photo viral

தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் புன்னகை இளவரசி சினேகா. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்தலாக நடிக்கக்கூடிய அவருக்கு என தற்போது வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை சினேகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொண்டு சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா  தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சினேகா அவ்வபோது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். அவ்வாறு அவர் அண்மையில் குடும்பத்தினருடன் கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் சினேகாவின் மகள் நல்லா வளந்துட்டாரே.. அழகில் அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்காரே என கமெண்டு செய்து வருகின்றனர்.