புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ப்பா.. இந்த வயசுலயும் வேற லெவல்! இளம் ஹீரோயின்களையே ஓரம்தள்ளும் சினேகா! கியூட் போட்டோஸ்!!
தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு, முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் சினேகா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவரை ரசிகர்கள் செல்லமாக புன்னகை இளவரசி என அழைத்து வந்தனர்.
இந்நிலையில் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இடையில் சில காலம் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். மேலும் அவர் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் குடும்ப புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் சினேகா தற்போது ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில், கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.