எல்லாம் நாடகம்.. 3 நாட்களுக்குள் அப்படி செய்யலைனா இதுதான் நடக்கும்! ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்!!

எல்லாம் நாடகம்.. 3 நாட்களுக்குள் அப்படி செய்யலைனா இதுதான் நடக்கும்! ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்!!


skin-doctor-send-lawyer-notice-to-raiza

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரைசா அண்மையில் பேஷியல் செய்வதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அங்கு அவர் தேவையில்லாத சில விஷயங்களை செய்ததால் தனது முகம்  முழுவதும் வீங்கி  பாதிக்கப்பட்டதாகவும் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் எனது முகம்  பாதிக்கப்பட்டது என குற்றம்சாட்டி ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ரைசா பைரவி செந்திலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

 இந்நிலையில் இதுகுறித்து  தோல் மருத்துவரான பைரவி செந்தில் கூறுகையில், இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது. அவரைக் கேட்டுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்புதான் அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற, சிகிச்சையை ஏற்கெனவே ஒருமுறை ரைசா எடுத்துக் கொண்டுள்ளார்.  இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். அவை மிக எளிதாக மாறிவிடும். ஆனால் அதனை கூறி ரைசா பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று விளக்கமளித்தார்.

Raiza

அதனைத் தொடர்ந்தும் தோல் மருத்துவர் பைரவி செந்தில், ரைசா 
தனது சிகிச்சை குறித்து அவதூறான கருத்தை பரப்பி வருகிறார். மற்ற வாடிக்கையாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் ரைசா நாடகமாடி வருகிறார். இதனால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என ரைசாவிற்கு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.