"தொடர்ந்து ஏறிவரும் மார்க்கெட்டால் தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர்!"

1988ம் ஆண்டு நெத்தியடி படம் தொடங்கி, கிழக்குச் சீமையிலே, ஆசை, பின்னர் 2000ம் ஆண்டு குஷி, மகா நடிகன், டிஸ்யூம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துளளார் எஸ். ஜே. சூர்யா. 2004ம் ஆண்டு "நியூ" படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.
தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், மேலும் சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். முன்னதாக 1999ம் ஆண்டு "வாலி" படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து குஷி, இசை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ். ஜே.சூர்யா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதையடுத்து சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ள எஸ். ஜே. சூர்யா, ஒரு படத்திற்கு 9கோடி சம்பளம் வாங்குகிறாராம். மேலும் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், D 50 ஆகிய படங்களில் நடித்து வருவதால் மேற்கொண்டு கால்ஷீட் இல்லை என்று தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம்.