சினிமா

தன் நண்பன் சதீஷ்காக, சிவகார்த்திகேயன் செய்யும் அசத்தலான காரியம்! அடேங்கப்பா.. என்னனு பார்த்தீங்களா!!

Summary:

அடேங்கப்பா.. தன் நண்பன் சதீஷ்காக, சிவகார்த்திகேயன் செய்யும் அசத்தலான காரியம்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் காமெடி நாயகனாக வலம் வந்தவர் சதீஷ்.  . அவர் தற்போது நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடித்து வருகிறார். 

மேலும் கல்பாத்தி எஸ்.அகரம் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதுகிறாராம்.

மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவலை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு மட்டுமின்றி சிவகார்த்திகேயன் விஜய்யின் பீஸ்ட் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

 


Advertisement