அட இது வேற லெவலப்பு! முதன்முறையாக சிவகார்த்திகேயனின் படம் படைத்த சாதனை! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

அட இது வேற லெவலப்பு! முதன்முறையாக சிவகார்த்திகேயனின் படம் படைத்த சாதனை! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!



sivakarthikeyan-doctor-movie-crossed-1-crores-income

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அருண் அலெக்சாண்டர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. படம் தயாராகி கொரோனாவால் ரிலீசாகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸானது. மேலும் முழுவதும் மக்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் அமைந்த இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது டாக்டர் படம் ஒரு கோடி கடந்து வசூல் சாதனை படைத்தது. 

இந்த நிலையில் டாக்டர் பட தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், வேற மாதிரி பிளாக்பஸ்டர். 25 நாட்கள் உங்களை சிரிக்க வைத்து கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் டாக்டர் படம் 100 கோடி கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதுவே சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் 100 கோடி வசூல் சாதனை படைத்த முதல் திரைப்படமாகும்.