பிஞ்சிலேயே பழுத்த சிவகார்த்திகேயன்.. சின்ன வயசுலயே அந்த மாதிரி வேலை பார்த்திருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட்.?Sivakarthikeyan childhood love story


சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறியவர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது.

Siva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் முதலில் 'மெரினா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். இதன்பின் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார்.


ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின் காமெடி நடிகர், கதாநாயகன், தயாரிப்பாளர், பாடகர், கதாசிரியர் என பல திறமைகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி வருகிறார்.

Siva

இது போன்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் ஆர்த்தியும், சிவகார்த்திகேயனும் ஒன்றாக இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தை பார்த்து அந்த வயசுலயே ஒன்னு சேர்ந்துட்டீங்களா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.