சினிமா

சிவகார்த்திகேயன், நயன்தாரா எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary:

sivakarhikayan - nayantharh - selfi

படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜாவை தொடர்ந்து தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் யோகி பாபு, சதீஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜித்து ஜில்லாடி என்று பெயர் வைக்கப்போவதாக தகவல்கள் வெளிவருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவகாத்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் மூவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


 


Advertisement