மாரி திரைப்பட நடிகர், பிரபல பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம் - பணியாட்கள் மீது மனைவி பகீர் புகார்.!
மாரி திரைப்பட நடிகர், பிரபல பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம் - பணியாட்கள் மீது மனைவி பகீர் புகார்.!

கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருடி தனக்கென சொகுசு வீடு, ஆடம்பர வாழ்க்கையில் இருந்த வயோதிக பணிப்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு திரை பிரபலத்தின் மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னை அபிராமபுரம் பகுதியில் தனது மனைவி தக்ஷனாவுடன், பிரபல திரைப்பட பாடகர் மற்றும் நடிகர் விஜய் யேசுதாஸ் வசித்து வருகிறார். இவர் தமிழில் தனுஷின் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தின் முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரமான காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார்.
தற்போது விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவரின் மனைவி சென்னையில் இருக்கிறார். இந்நிலையில், இவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் இருந்த 60 சவரன் வைர, தங்க நகைகள் மாயமாகி இருக்கின்றன.
வீட்டில் இருந்த பணியாட்களிடம் விசாரித்தபோது சரிவர பதில் கிடைக்கவில்லை. இதனால் எனது நகைகளை திருடியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் பணியாற்றி வந்த நபர்களின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.