
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இதில
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் உடல் எடை நன்கு கூடியிருந்த நிலையில் சிம்பு தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு எடையை குறைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. நடிகர் சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த டைட்டில் மாற்றப்பட்டு படக்குழு 'வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைத்துள்ளது. இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அசர வைத்துள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக இருக்கும் உடலுடன், அழுக்கு லுங்கி, சட்டையுடன் காணப்படுகிறார். மேலும் இந்த படத்திற்காக நடிகர் சிம்பு ஆறு மாதம் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு, 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement