சினிமா

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்.! குஷியில் சிம்பு ரசிகர்கள்..!

Summary:

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்.! குஷியில் சிம்பு ரசிகர்கள்..!

வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தேர்ந்தெடுத்துள்ளது வேல்ஸ் பல்கலைகழகம். 

இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தினை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்பட்டது. 

பட்டமளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும் பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கிறார்.


Advertisement